எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
2511
ஏறாவூர் மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவலைவில் உள்ள "அல்லாஹு அக்பர்" எனும் வசனத்தை மறைத்து கட்டப்பட்டுள்ள பிரதி அமைச்சரின் கட்டவுட் - பொது மக்கள் விசனம்.[ - ஸப்றாஸ் - ] [ visits : 494 ]
அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏறாவூரில் பல் வேறு நிகழ்வுகள் பலதரப்பட்ட அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதனையொட்டி ஆங்காங்கே பதாதைகளும் கொடிகளும் கட்டப்பட்டு இருந்தது.
இந்த நாட்டில் யுத்தத்தை முடித்து அமைதியான சூழலை ஏற்படுத்திய ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டு மக்கள் ஜனாதிபதியின் பிறந்த தினத்தை அனுஸ்டிப்பதில் தவறில்லை என்றாலும் இவ்வாரக அல்லாஹு அக்பர் எனும் வசனத்தை மறைத்து கட்டவுட் கட்டுவதை எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
ஏறாவூர் நகர சபையை அலிஸாஹிர் மௌலானா தலைமையிலான புதிய நிருவாகம் பொறுப்பேற்றதை தொடர்ந்து மணிக்கூட்டுக்கொபுரம் புணரமைக்கப்பட்டு புதுப்பொழிவுடன் காட்சியளிக்கும் இவ்வேளையில் அதன் எழிலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இவ்வாறான பதாதைகள் கட்டப்படுவது மிகவும் மனம் வருந்த வைக்கின்றது.
கோபுரத்தை சுற்றி மூன்று பக்கமும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், சுபஹானல்லாஹ், என்ற மூன்று அறபு சொற்பதங்களும் பொது அமைப்பின் அனுரனையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மேற்படி மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவலைவில் கட்டப்பட்டுள் பிரதி அமைச்சரின் கட்டவுட் உடடியாக அகற்றப்பட்டு பிரிதொரு இடத்தில் கட்டப்பட வேண்டும்.
அத்துடன் அங்கு கட்டப்பட்டுள்ள மாகாண அமைச்சரின், நகர சபையின் கட்டவுட்களும் அகற்றப்படுவதோடு இனி வரும் காலங்களில் அச்சுற்றுவலைவில் எதுவித கட்டவுட்களோ, விளம்பரங்களோ ஒட்டுவதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும், ஏறாவூர் நகர சபை முதல்வர் எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இது தொடர்பான ஏறாவூர்நியூஸ் ஊடாகத் தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை
2511
ஏறாவூர் நகர முதல்வர் அ...[ - ஸப்றாஸ் - ] [ visits : 414 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 66வது பிறந்த தினத்தை முன்னிட்டு 18.....
2611
ஏறாவூர் கல்வி அபிவிரு...[ - பிரௌஸ் - ] [ visits : 333 ]
ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால்(EEDI) ஏறாவூரில் உள்ள பாடசால.....