எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
1411
யாழ். மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை செய்த முகவர் யாழ்.கொட்டடியில் கைது![ - சிஹான் - ] [ visits : 116 ]
யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்த பிரதான முகவரை நேற்று யாழ்.நகர் கொட்டடி பகுதியில் வைத்து யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இத்தகவலை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி சமன் சிகாரே தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பாடசாலை மாணவர்கள் யஹரோ யின் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த தகவலின் அடிப்படையில் யாழ். நகரில் உள்ள வீடொன்றில் வைத்து 8 மாணவர்களை கைது செய்தோம். அத்துடன் மேலும் இரு மாணவர்களையும் பின்னர் கைது செய்தோம்.
இம் மாணவர்கள் 10 பேரும் ஆரம்ப விசாரணைகளின்பின் யாழ்.மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தோம். இதன்போது ஐந்து மாணவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தலுடன் ஏனைய 5 மாணவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு வழங்கினார்.
இந் நிலையில் விசாரணைகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருட்களை விநியோகித்த பிரதான முகவரை நேற்று கொட்டடியில் வைத்து கைது செய்துள்ளோம்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நாளை திங்கள் கிழமை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படுவார் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
1411
கணணி மற்றும் இணையம் பற...[ - சிஹான் - ] [ visits : 145 ]
கணணி மற்றும் இணையம் பற்றி கற்றுக் கொள்ள அனைவருக்கும் விருப்பம் இர.....
1411
கணணியில் திறக்க இயலாத ...[ - சிஹான் - ] [ visits : 139 ]
பலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலும் சில வகையான கோ.....