எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்

இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு 40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
1310
சிங்கள மாணவர்கள் வருகை அதிகரிப்பினால் யாழ் பல்கலை. விடுதியிலிருந்து தமிழ் மாணவர்கள் வெளியேறும்படி அறிவுறுத்து!- நெருக்கடியில் வன்னி மாணவர்கள்[ - அறுஸ் - ] [ visits : 83 ]
யாழ் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள தமிழ் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருப்பதால் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் அதிக எண்ணிக்கையானவர்கள் வருகை தந்ததை அடுத்தே நிர்வாம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
ஏற்கனவே மருத்துபீடம் மற்றும் விஞ்ஞான பீடங்களைச் சேர்ந்த 40 சிங்கள மாணவர்கள் விடுதியில் கல்வி கற்று வந்துள்ள நிலையில் விஞ்ஞான பீடத்திற்கு 140 மாணவர்களும் முகாமைத்துவ பீடத்திற்கு 50 மாணவர்களும் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக சூழலில் சிங்கள மாணவர்களும் அவர்களை அழைத்து வந்துள்ள பெற்றோர்களும் நிறைந்து நிற்கின்றனர்.
யாழ் பல்கலைக்கழகத்திற்கு வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இணைந்ததையடுத்து பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மாணவர்களை வெளியேறும்படி பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் போரால் பாதிப்புக்களுக்கு உள்ளான வன்னி மாணவர்கள் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வருவதை முன்னிட்டு எந்த விடுதி ஏற்பாடும் இதுவரையில் செய்யப்படவில்லை.
திடீரென இந்த மாணவர்கள் வருகை தந்துள்ள நிலையில் விடுதியில் தங்கியுள்ள புதுமுக மாணவர்கள் தவிர வன்னி மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் முதலாம் வருட மாணவர்களும் வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் வெளிமாவட்ட மாணவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வன்னியைச் சேர்ந்த பேரால் பாதிக்கப்பட்ட மாணவர்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட இந்த மாணவர்களில் மீள்குடியேறாதவர்களும் உறைவிடமற்றவர்களும் அங்கவீனமடைந்தவர்களும் முன்னாள் போராளிகளும் அடங்குகின்றனர்.
இவர்கள் யாழில் உள்ள தற்போதைய பதற்றமான சூழலில் இவர்களுக்கு தங்குமிடங்களைப் பெறுவதில் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். சிங்கள மாணவர்களின் வருகையடுத்து அனைத்து வருட மாணவர்களும் விடுதிகளை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
போர் தீவிரமடைந்ததையடுத்து வன்னி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவுச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வழமையின்படி முதலாம் வருட மாணவர்களும் நான்காம் வருட மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
அதேவேளை போரால் பலத்த பாதிப்புக்களுக்கு உள்ளான மாணவர்களும் அங்கவீனமடைந்த மாணவர்களும் முன்னாள் போராளி மாணவர்களும் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்துத் தமிழ் மாணவர்களும் விடுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாணவர் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் அதிக எண்ணிக்கை கொண்ட மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுகிறது.
1310
பிரித்தானியாவின் Big Ben ம...[ - அறுஸ் - ] [ visits : 73 ]
இங்கிலாந்தின் லண்டனின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படு.....
1310
இலங்கையின் பொருளாதார...[ - அறுஸ் - ] [ visits : 76 ]
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 14.7 மில்லிய.....