ஏறாவூரில் இதுவரை பல்கலைக்கழகங்களினூடாக வெளியான ஏறாவூர் பட்டதாரிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கீழே காணப்படும் படத்தை Click செய்து உங்களை பதிவு செய்வதன் ஊடாக இச் செயற்றிட்டத்திற்கு உதவுங்கள்.
எமது ஊரின் தேவைக்காக சிரமம் பாராது தயவு செய்து பதிவு செய்யுங்கள்
இங்கு பிரசுரிக்கப்படும் செய்திகளை சுருக்கமாக உங்கள் கைத்தொலைபேசியில் SMS ஊடாக இலவசமாக பெறுவதற்கு
FOLLOW இடைவெளி eravurnews என Type செய்து
40404 ற்கு SMS அனுப்புங்கள். Only in Sri Lanka
Dialog, Mobitel, Etisalat Only
Airtel, வெளிநாட்டு நண்பர்கள் இச்சேவையைப் பெற இங்கே Click பண்ணவும்
1409
வடக்கிற்கு தமிழ் பொலிஸார் அவசியம் - பிளேக் வலியுறுத்தல்
[ - ஜே.எம். ரிஷாட் (கட்டார்) - ] [ visits : 63 ]

வடக்கில் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துமாறும் அவ்வாறு ஈடுபடுத்தினால் இராணுவத்தினரது தேவைப்பாடு நீடிக்காது எனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் மனித உரிமையின் நிலைப்பாடு குறித்தும் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வளித்தல் குறித்து தான் கவனத்தில் கொண்டதுடன் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்தும் தான் கவனத்தில் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இனம்தெரியாத ஆயுதக் குழுக்கள் குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவற்றினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடக்கு வாழ் மக்கள் மர்ம மனிதன் நிலைகுறித்து தனக்கு தெரிவித்ததாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரொபேட் ஓ பிளேக்கின் உரை:-



1409
வெறுக்கத்தக்க வாடையு...
[ - எம்.நயீம் (அபூ ஸைமா) - ] [ visits : 66 ]

வெங்காயம் பூண்டு மற்றும் இதுபோன்ற வெறுக்கத்தக்க வாடை தரும் பொருட.....

1409
பெண்களின் ஆடை ...
[ - எம்.நயீம் (அபூ ஸைமா) - ] [ visits : 81 ]

பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றி அல்குர்ஆனும் ஸ.....